UPDATED : ஜன 09, 2024 06:39 PM
ADDED : ஜன 09, 2024 06:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகா கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிற்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா கவர்னர் தாவர் சந்த் கெலாட், இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்து தொடர்பு கொண்டவர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.