3 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கர்நாடக அரசின் 'புத்தாண்டு பரிசு'
3 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கர்நாடக அரசின் 'புத்தாண்டு பரிசு'
ADDED : ஜன 01, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக அரசின் மூன்று தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா அரசு ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், பணி சேவையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குகிறது. இந்த ஆண்டு 46 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைத்து உள்ளது.
இதில், துணை முதல்வர் சிவகுமாரின் செயலர் ராஜேந்திர சோழன்; திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு துறை கமிஷனர் ராகபிரியா; விஜயபுரா மாவட்ட கலெக்டர் பூபாலன் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் மூவரும், தற்போது வகிக்கும் பதவியில் நீடிப்பர். சம்பள விகிதம் அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.