குமாரசாமி குறித்து கர்நாடகா அமைச்சர் அவதூறு பேச்சு
குமாரசாமி குறித்து கர்நாடகா அமைச்சர் அவதூறு பேச்சு
ADDED : நவ 12, 2024 02:25 AM

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி குறித்து இனவெறியை தூண்டும் விதமாக அவதூறு பேசியதாக கர்நாடகா அமைச்சருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இம்மாநிலத்தில் காலியாக உள்ள சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு நாளை (நவ.13) இடைத்தேர்தல் நடக்கிறது.
இதில் சென்னாபட்டணா தொகுதியில் போட்டியிடும் யோகேஷ்வர் என்பவர் சமீபத்தில் பா.ஜ.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியி்ல் இணைந்தார்.இதையடுத்துஇத்தொகுதி காங்., வேட்பாளராக உள்ளார்.
இவரை ஆதரித்து கர்நாடகா காங்., அமைச்சர் ஜமீர் அகமதுான் பிரசாரம் செய்தார். அப்போது மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி.குமாரசாமி குறித்து செய்தியாளர் கேட்டனர்.
கருப்பு குமாரசாமி மிகவும் ஆபத்தனவர் என அவதூறாக பேசினார். இவர் பேசியதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம்(எஸ்) கடும் விமர்சனம் செய்து வருகிறது. கர்நாடக அமைச்சரின் இனவெறி இழிவுக்காக கர்நாடக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
இனவெறியை தூண்டும் கர்நாடகா அமைச்சர் பதவியை முதல்வர் சித்தராமையா பறிக்க வேண்டும் என்றார்.