தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மேகதாது திட்ட தொழில்நுட்ப அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் கர்நாடகா வலியுறுத்தல்

மேகதாது திட்ட தொழில்நுட்ப அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் கர்நாடகா வலியுறுத்தல்

மேகதாது திட்ட தொழில்நுட்ப அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் கர்நாடகா வலியுறுத்தல்


ADDED : செப் 02, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 05:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மேகதாது அணை திட்டத்திற்கான தொழில்நுட்ப அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கர்நாடகா வலியுறுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டும் திட்டத்தை அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தின் கடும் எதிர்ப்புகளை மீறி, இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என, அதற்கான முயற்சிகளை அம்மாநில அரசு வேகப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு கட்டமாக, மேகதாது அணை திட்ட தொழில்நுட்ப அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கர்நாடகா வலியுறுத்தி உள்ளது. புதுடில்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் செலுவராயசாமி, மத்திய நீர் ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திட்டத்திற்கு தேவையான சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல்கள் குறித்தும், கர்நாடகா சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது, மேகதாது திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், தேவையான தொழில்நுட்ப தகவல்கள், விளக்கங்களை கர்நாடக நீர்வளத்துறை விரைவில் வழங்கும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us