sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கருண் நாயர் அதிரடி வீண்; டில்லியை 12 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி

/

கருண் நாயர் அதிரடி வீண்; டில்லியை 12 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி

கருண் நாயர் அதிரடி வீண்; டில்லியை 12 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி

கருண் நாயர் அதிரடி வீண்; டில்லியை 12 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி


ADDED : ஏப் 14, 2025 12:04 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கருண் நாயர் அதிரடி அரைசதம் அடித்தும், கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்த டில்லி அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி கண்டது.

டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ரோகித் ஏமாற்றம்


மும்பை அணிக்கு ரோகித் சர்மா, ரியான் ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் தந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ரிக்கிள்டன், முகேஷ் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். மறுமுனையில் அசத்திய ரோகித், ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த போது விப்ராஜ் நிகம் 'சுழலில்' ரோகித் (18) சிக்கினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், முகேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் மும்பை அணி 59/1 ரன் எடுத்திருந்தது.

ரிக்கிள்டன் ஆறுதல்


குல்தீப் யாதவ் 'சுழலில்' ரிக்கிள்டன் (41 ரன், 2 சிக்சர், 5 பவுண்டரி) போல்டானார். குல்தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திலக் வர்மா, அக்சர் படேல், மோகித் சர்மா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். குல்தீப், அக்சர், மோகித் பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டிய சூர்யகுமார், விப்ராஜ் நிகம் வீசிய 13வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது குல்தீப் பந்தில் சூர்யகுமார் (40 ரன், 2 சிக்சர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

திலக் அபாரம்


நிகம் பந்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (2) அவுட்டானார். அடுத்து வந்த நமன் திர், மோகித் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். பொறுப்பாக ஆடிய திலக், 26 பந்தில் அரைசதம் எட்டினார். ஸ்டார்க் வீசிய 18வது ஓவரில் நமன் திர் 2, திலக் ஒரு பவுண்டரி விரட்டினர். முகேஷ் வீசிய கடைசி ஓவரில் திலக் (59 ரன், 3 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. நமன் திர் (38), வில் ஜாக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டில்லி அணி, முதல் பந்திலேயே மெக்கார்க் விக்கெட்டை இழந்தது. பின் அபிஷேக் போரலுடன் கைகோர்த்த கருண் நாயர், அதிரடியாக விளையாடினார். போரல் (33), ராகுல் (15), கேப்டன் அக்சர் (9), ஸ்டப்ஸ்(1) ஏமாற்றினர். 5 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 40 பந்தில் 89 ரன்கள் விளாசிய கருண் நாயர், சான்ட்னர் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

பின் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட, 19 ஓவரில் 193 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் டில்லி அணி இழந்தது. இதன்மூலம், 12 ரன்கள் வித்தியாசத்தில், மும்பை அணி வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில், 7வது இடத்துக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us