sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கரூர் நெரிசல் வழக்கு: விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு

/

கரூர் நெரிசல் வழக்கு: விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு

கரூர் நெரிசல் வழக்கு: விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு

கரூர் நெரிசல் வழக்கு: விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு

17


UPDATED : ஜன 19, 2026 04:47 PM

ADDED : ஜன 19, 2026 10:39 AM

Google News

UPDATED : ஜன 19, 2026 04:47 PM ADDED : ஜன 19, 2026 10:39 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கரூர் நெரிசல் வழக்கில் இன்று (ஜனவரி 19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில், விஜய் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விஜயிடம் விசாரணை முடியாத நிலையில், பொங்கலுக்கு பின் விசாரணைக்கு ஆஜராவதாக சி.பி.ஐ., அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், ஜன., 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பினர். அதை ஏற்றுக்கொண்ட விஜய், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் நேற்று டில்லி சென்றார்.

அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று முற்பகல் 11 மணயளவில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணை நிறைவு பெற்றது. அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

சிபிஐ கேள்விகள்

கரூர் பொதுக்கூட்டத்தில் நிலைமை மோசமாகிறது என்பதை நீங்கள் அறியவில்லையா? போலீசார் தடுப்பையும் மீறி வாகனத்தில் சென்றது ஏன்? வாகனத்தில் இருந்தபடி தண்ணீர் பாட்டில் வீசினீர்கள் அப்போது நெரிசல் தெரியவில்லையா? பிரசார இடத்திற்கு தாமதமாக வந்தது ஏன்? சாலைகள் வளைவாக இருந்தது என்றால் ஆதாரங்கள் என்ன ? என கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.



முதல் நாள் விசாரணைக்கு வந்தது போலவே இன்றும் விஜய் கார் சிபிஐ அலுவலகத்தின் போர்டிகோ வரை சென்று நிறுத்தப்பட்டது. காரில் கண்ணாடி பொருத்தி மறைத்து இருந்ததால் பத்திரிகையாளர்கள் யாரும் படம்பிடிக்க முடியவில்லை.






      Dinamalar
      Follow us