sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடிகர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு

/

நடிகர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு

நடிகர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு

நடிகர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு

16


UPDATED : மார் 15, 2026 07:03 PM

ADDED : மார் 15, 2026 11:09 AM

Google News

16

UPDATED : மார் 15, 2026 07:03 PM ADDED : மார் 15, 2026 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று (மார்ச் 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு வீடியோ ஆதாரங்களை காண்பித்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, சென்னையில் இருந்து டில்லிக்கு தனி விமானம் மூலம் வந்தார். அவருடன் த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட, ஏழு பேர் வந்தனர்.

வீடியோவை காண்பித்து விசாரணை

இந்நிலையில் இன்று (மார்ச் 15) காலை 10.20 மணியளவில் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தயார் செய்து வைத்து இருந்த பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கரூரில் விசாரணை நடத்திய நபர்களிடம் பெறப்பட்ட வீடியோ வாக்குமூலம், கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு விஜய் பதில் அளித்தார். தொடர்ந்து, 8 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை இன்று மாலை நிறைவு பெற்றது.

அனுமதியில்லை

கடந்த முறை விசாரணையை போலவே சிபிஐ அலுவலக போர்டிகோ வரை காரில் விஜய் சென்றார். அப்பகுதியில் விஜயை புகைப்படம் எடுப்பற்கு செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவு

காலை 9:30 மணி முதல், 7 மணி நேரத்துக்கும் மேலாக (உணவு இடைவேளை போக) நடந்த விசாரணை முடிந்து மாலை 6:00 மணிக்கு விஜய் வெளியே வந்தார். திரண்டிருந்த செய்தியாளர்கள், பொதுமக்களை பார்த்து திறந்த காரில் நின்றபடி, சிரித்துக் கொண்டே கை அசைத்துச் சென்றார்.






      Dinamalar
      Follow us