ADDED : ஆக 01, 2011 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர் : தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிஜ்பிஹாராவில் இருந்து சுற்றுலா சென்ற பஸ் வளைவில் வளைந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5000 ம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக காஷ்மீர் டிவிஷனல் கமிஷ்னர் அறிவித்துள்ளார்.