UPDATED : பிப் 01, 2024 02:46 PM
ADDED : பிப் 01, 2024 02:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காஷ்மீரில் கொட்டும் பனியிலும் தடையாகாமல் ரயில் பயணம் தொடர்கிறது என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் பாரமுல்லா- பனிஹால் இடையிலான ரயில் பயணம் தடை செய்யப்படவில்லை. அர்ப்பணிப்புடன் கொட்டும் பனியிலும் ரயில்சேவை தொடர்கிறது என்பது சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
பனிப்பொழிவில் ரயில் வேகமுடன் செல்லும் வீடியோவும் ரசிக்கும்படியாக உள்ளது.