காஷ்மீர் மாரத்தான்: 2 மணி நேரத்தில் 21 கி.மீ., தூரம் ஓடிய முதல்வர்
காஷ்மீர் மாரத்தான்: 2 மணி நேரத்தில் 21 கி.மீ., தூரம் ஓடிய முதல்வர்
UPDATED : அக் 20, 2024 08:19 PM
ADDED : அக் 20, 2024 08:12 PM

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் நடந்த காஷ்மீர் மாரத்தானில், முதல்வர் உமர் அப்துல்லா 2 மணி நேரத்தில் 21 கி.மீ.,தூரம் ஓடினார்.
ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச மாரத்தான் இன்று நடந்தது. இதில் பல நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தால் ஏரி பகுதியில் நடந்த இந்த மாரத்தானில், அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் பங்கேற்றார். அவர் 2 மணி நேரத்தில் 21 கி.மீ., தூரம் ஓடினார்.
இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர்வெளியிட்ட பதிவில் கூறியுள்ளாதாவது: காஷ்மீர் மாரத்தானில் 21 கி.மீ., தூரம் ஓடினேன். ஒரு கி..மீ.,க்கு சராசரியாக 5 நிமிடம் 54 வினாடிகள் என்ற வேகத்தில் ஓடினேன். என் வாழ்நாளில் 13 கி.மீ.,க்கு மேல் ஓடியதில்லை. அதுவும் ஒரு முறைதான். என்னைப் போன்ற மற்ற வீரர்களின் உற்சாகத்தால் இன்று நான் தொடர்ந்து ஓடினேன். முறையான பயிற்சிஇல்லை. திட்டம் இல்லை. ஊட்டச்சத்தும் இல்லை. வழியில் ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரிரு பேரீச்சம்பழங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன். எனது வீட்டை கடந்த போது குடும்பத்தினர் உற்சாகப்படுத்தியது சிறந்த அம்சம். இவ்வாறு அந்த பதிவில் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
மேலும் மற்ற பதிவுகளில், மாரத்தானில் பங்கேற்றவர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியையும் வெளியிட்டு உள்ளார்.மேலும் மன அழுத்தத்தை குறைக்க போதை மருந்து தேவையில்லை. ஒரு கி.மீ., தூரமாக இருந்தாலும் சரி மாரத்தான் ஆக இருந்தாலும் சரி இயற்கையான மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அடைய நல்ல ஓட்டம் போதுமானது. இதனை முயற்சி செய்யுங்கள். நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். போதைப்பொருள் இல்லாத காஷ்மீரை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.