தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீர் நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனை

காஷ்மீர் நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனை

காஷ்மீர் நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனை


ADDED : ஜூலை 18, 2024 03:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 03:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீரில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகள் அமைத்து ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சூழ்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us