UPDATED : ஏப் 25, 2025 05:39 AM
ADDED : ஏப் 24, 2025 06:10 PM

புதுடில்லி: பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று(ஏப்ரல் 25) ஸ்ரீநகர் செல்கிறார்.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.
இந்நிலையில், ராணுவ தளபதி விக்ரம் மிஸ்ரி இன்று ஸ்ரீநகர் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். அவரிடம் அங்குள்ள ராணுவ உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் கமாண்டர்கள் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பல பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.