தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கனமழையால் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்; கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

கனமழையால் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்; கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

கனமழையால் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்; கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்


UPDATED : மே 31, 2026 06:30 PM

ADDED : மே 31, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 06:30 PM ADDED : மே 31, 2026 06:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேராடூன்: உத்தரகண்டில், கனமழை காரணமாக கேதார்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்டில், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்ற நான்கு கோவில்களின் தரிசனத்துக்கான, 'சார்தாம்' யாத்திரை சமீபத்தில் தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இந்த சார்தாம் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள, 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான கேதார்நாத் மலை கோவிலுக்கு செல்ல இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கேதார்நாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேதார்நாத் புனித யாத்திரையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். பக்தர்கள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, உத்தரகண்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணியர் மலைப் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்புப் படையினரும், போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us