sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சட்டசபை உரிமைக்குழு முன் ஆஜரானார் கெஜ்ரிவால்

/

 சட்டசபை உரிமைக்குழு முன் ஆஜரானார் கெஜ்ரிவால்

 சட்டசபை உரிமைக்குழு முன் ஆஜரானார் கெஜ்ரிவால்

 சட்டசபை உரிமைக்குழு முன் ஆஜரானார் கெஜ்ரிவால்


ADDED : மார் 07, 2026 01:08 AM

Google News

ADDED : மார் 07, 2026 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபையில் உரிமைக்குழு முன் நேற்று, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அதன் விபரங்கள் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, பத்திரிகையாளர்களை சந்தித்த கெஜ்ரிவால்,''தேச பக்தர்களை இழிவுபடுத்தும் பா.ஜ., தேச பக்தர்களை பிரிட்டிஷ் அரசு துாக்கிலிட்ட இடத்தை, டிபன் ரூம் என கூறுகிறது,'' என்றார்.

டில்லியில் நேற்று, சட்டசபை உரிமைக்குழு முன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜரானார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த, 2022ல் அப்போதைய சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், முதல்வரான என்னை அழைத்து, இந்த இடம், தேச பக்தர்களை துாக்கிலி ட பயன்படுத்தப்பட்டது என்றார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று, அந்த இடத்தை பார்வையிட சுற்றுலா பயணியருக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த இடத்தை, டிபன் ரூம் என்கிறது, பா.ஜ., இதை விட சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வேறு அவமதிப்பு இருக்க முடியாது.

எத்தனையோ விவகாரங்களில் அரசியல் செய்வது போல, இந்த விவகாரத்திலும் அரசியல் செய்ய, பா.ஜ., நினைக்கிறது.

அக்கட்சியின் செயல்பாட்டால், டில்லி மக்கள் வேதனைப்படுகின்றனர். அவர்கள் இப்போது தான், எங்களின் ஆம் ஆத்மி அரசின் அமைதியான செயல்பாட்டை எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சட்டசபை உரிமைக்குழு முன் ஆஜராக வந்த கெஜ்ரிவாலுடன் சென்ற அவரின் பாதுகாவலர், சட்டசபையின் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரின் உதவியாளர்கள் கூட, அவருடன் செல்ல அனுமதிக்கவில்லை. எனினும், முன்னாள் முதல்வர் ஆதிஷி, முன்னாள் சபாநாயகர் ராம் நவாஸ் கோயல் போன்றோர் உடன் சென்றனர்.

இதுகுறித்து, ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான சவுரவ் பரத்வாஜ் கூறும் போது, ''இதுபோன்று யாருக்கும், கடந்த பத்தாண்டுகளாக நடக்கவில்லை. எத்தனையோ பேர் உரிமைக்குழு முன் ஆஜராகியுள்ளனர். அப்போதெல்லாம், இதுபோல நடந்ததில்லை. கெஜ்ரிவாலுக்கு மட்டும், எந்த உதவியாளர் களும் உடன் செல்ல அனுமதிக்கவில்லை,'' என்றார்.

'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்

என்ற கோரிக்கை நிராகரிப்பு

'ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி, பத்தாண்டுகளாக இந்த சபையின் உறுப்பினராக இருந்தார். அவர் உறுப்பினராக இருந்த போது, உரிமைக்குழு முன் நடந்த எந்த விவாதமாவது 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதா' என கேள்வி எழுப்பி, டில்லி சட்டசபை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. டில்லி சட்டசபை வளாகத்தில் உள்ள ஒரு அறையை, பா.ஜ., டிபன் ரூம் என கூறும் நிலையில், அந்த அறையை, பிரிட்டீஷ் ஆட்சியாளர் கள் துாக்கிலிடும் அறையாக பயன்படுத்தினர் எ ன, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார் எனவே, இது குறித்து, தங்கள் வசம் உள்ள ஆவணங்களை உரிமைக்குழு முன் ஆஜராகி வழங்க வேண்டும் என, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியிருந்தார். அதன் படி, கடந்த செவ்வாய் கிழமை சபாநாயகருக்கு கெஜ்ரிவால் எழுதியிருந்த கடிதத்தில், வரும் 6ம் தேதி, வெள்ளிக்கிழமை ஆஜராக போவதாகவும், அந்த நிகழ்வை, டிவியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலையில், டில்லி சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எந்த காரணத்தை கொண்டும், உரிமை குழு முன் கெஜ்ரிவால் ஆஜராகும் நிகழ்வு, நேரடியாக 'டிவி'யில் ஒளிபரப்பப்படாது. இந்த நடைமுறை, உரிமைக்குழுவுக்கு உரித்தானது. இந்த நடைமுறை எப்படி, பத்தாண்டுகள் இந்த சபையில் உறுப்பினராக இருந்த கெஜ்ரிவாலுக்கு தெரியாமல் போனது என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலின் அறியாமையை எண்ணி, சட்டசபை சபாநாயகர் வியப்பு தெரிவிக்கிறார். இதுபோல, இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை. உரிமைக்குழு முன் நடந்த விவாதங்கள் எப்போதாவது, வெளியே வந்துள்ளனவா என்பதை கெஜ்ரிவால் அறியாதது வியப்பை அளிக்கிறது என சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறுகிறார். எனவே, எந்த காரணத்தை கொண்டும், கெஜ்ரிவாலின் கோரிக்கையான, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பு நடக்காது. இவ்வாறு, சட்டசபை செயலகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us