நாட்டை சர்வாதிகாரத்திடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்: கெஜ்ரிவால்
நாட்டை சர்வாதிகாரத்திடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்: கெஜ்ரிவால்
UPDATED : மே 10, 2024 09:16 PM
ADDED : மே 10, 2024 07:07 PM

புதுடில்லி: 50 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜாமின் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கெஜ்ரிவாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தது அமலாக்கத்துறை. தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமின் கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமின் மனு தாக்கல் செய்து வந்தார். அவரை ஜாமினில் விடுவதற்கு அமலாக்கத்துறையும ஒவ்வொரு முறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனிடையே ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதையடுத்து 50 நாள் சிறைவாசத்திற்கு பின் இன்று( மே.,10 ம் தேதி) இரவு 7 மணியளவில் திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலை
வழி நெடுகிலும் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக
வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர்
பேசியதாவது: இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு
நன்றி. சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும். நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.
கடவுளின் ஆசி எனக்கு உண்டு. நாளை (11-ம் தேதி) அனுமன் கோவிலுக்கு சென்று
பிரார்த்தனை நடத்த உள்ளதாகவும், கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை
சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவால் விடுதலையை மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
![]() |
ஆரத்தி எடுத்து வரவேற்பு
ஊழல் வழக்கில் ஜாமினில் விடுதலையான டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..