கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்
கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்
ADDED : மே 13, 2024 12:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் பதவி நீக்கம் செய்ய முடியாது எனக்கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ''டில்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.