ADDED : ஜன 14, 2026 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில், ஆம் ஆத்மி அரசில், மதுபானங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, மது விலக்கு துறை தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மே 8 ம் தேதிக்கு அந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 21 மற்றும் ஜூன் 26ம் தேதிகளில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம், கடந்த 2024 ஜூலை 12ல் ஜாமின் வழங்கியது. அதை எதிர்த்து, சுங்க வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையை தான், மே 8 ம் தேதிக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்வரனா கந்தா சர்மா ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டார்.

