ADDED : ஜூன் 19, 2024 03:14 PM

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக மார்ச் 21ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கொள்கையை வடிவமைப்பதிலும், லைசென்ஸ் வழங்க லஞ்சம் பெற்றதிலும் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களில் ஆம் ஆத்மி பயன்படுத்தியது எனவும் குற்றம்சாட்டியது. ஆனால், இதனை ஆம் ஆத்மி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.