சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறார் கெஜ்ரிவால்: 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு
சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறார் கெஜ்ரிவால்: 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு
UPDATED : நவ 21, 2024 10:19 PM
ADDED : நவ 21, 2024 10:16 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. இதற்காக 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.
டில்லி சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், கைதாகி சிறை சென்றதால் முதல்வர் பதவியில் இருந்து விலகிய கெஜ்ரிவால், மீண்டும் மக்கள் ஆதரவுடன் முதல்வர் ஆவேன் எனக்கூறியுள்ளார். இதனால், இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர் உள்ளார்.
இதனையடுத்து அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழு இன்று கெஜ்ரிவால் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தியது. தேர்தல் வியூகம் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிஷி, கட்சி மூத்த தலைவர் கோபால் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார். அதில் பா.ஜ., மற்றும் காங்கிரசில் இருந்து வந்த தலா 3 பேருக்கு கெஜ்ரிவால் வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் 3 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.