3வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை கண்டுகொள்ளாத கெஜ்ரிவால்: பா.ஜ., விமர்சனம்
3வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை கண்டுகொள்ளாத கெஜ்ரிவால்: பா.ஜ., விமர்சனம்
ADDED : ஜன 03, 2024 10:43 AM

புதுடில்லி: 3வது முறையாக அமலாக்கத்துறை அனுப்பியிருந்த சம்மனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும் என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
டில்லி அரசின் மதுபான கொள்கை மோசடி வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இரண்டு முறை சம்மன் அனுப்பியபோது, இரண்டு முறையும் அவர் புறக்கணித்திருந்தார்.
சட்டவிரோதமானது
இன்று(ஜன.,03) ஆஜராகும்படி 3வது முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. 3வது முறையும் இன்றும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
குற்றவாளியா?
கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அமலாக்கத்துறையின் 3வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை.
சஞ்சய் ராவத் 'சர்டிபிகேட்'
அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவரது துணிச்சலையும் நான் அறிவேன். அவர் யாருக்கும் பயப்படமாட்டார் என உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.