பஞ்சாப் முதல்வரா கெஜ்ரிவால்? மறுக்கிறார் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வரா கெஜ்ரிவால்? மறுக்கிறார் பகவந்த் மான்
ADDED : பிப் 19, 2025 06:31 PM
சண்டிகர்:“ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வராக விரும்புவதாக எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகின்றனர்,”என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
சர்துல்கர் நகரில் பகவந்த் மான், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் யூகிப்பதை எல்லாம் வதந்தியாக பரப்பி வருகின்றனர். எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் ஆலோசனை நடத்தினார். இது எங்கள் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம். ஆனால், கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் பதவியை ஏற்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்தினார் என எதிர்க்கட்சியினர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். அதில் துளியும் உண்மை இல்லை.
டில்லியில், பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும். எங்கள் ஒருங்கிணைப்பாளர் கட்சியை கட்டமைக்கும் பணியில் முன்பை விட தீவிரமாக ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

