தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கோவா மாநிலத்தில் 2 நாள் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்

கோவா மாநிலத்தில் 2 நாள் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்

கோவா மாநிலத்தில் 2 நாள் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்


ADDED : செப் 29, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனாஜி:மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கோவா மாநிலத்தில் அக். 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் செல்கிறார்.

இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநிலத் தலைவர் அமித் பலேகர் கூறியதாவது:

கோவா மாநிலத்தில் டிசம்பர் மாதம் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுகிறது.

எனவே, தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அக். 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோவா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

வடக்கு மற்றும் தெற்கு கோவாவில் தலா ஒரு இடத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் கெஜ்ரிவால், தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக விவாதிக்கிறார்.

மேலும், கோவா மாநிலத்தில் கட்சி அமைப்பை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

கோவா மாநிலத்தின் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசியக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கு, 40 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட கோவா சட்டசபையில் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us