ADDED : மார் 06, 2024 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: குஜராத்தில் ராகுலின் ஒற்றுமை நியாய யாத்திரையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி காங். எம்.பி., ராகுல் ஒற்றுமை நியாய யாத்திரை கடந்த ஜன.14-ம் தேதியன்று மணிப்பூரில் துவக்கி, பல்வேறு மாநிலங்கள் வழியாக நாளை (மார்ச் 07)ம் தேதி குஜராத் வந்தடைகிறது. அப்போது தாஹோத் மாவட்டம் ஜஹேலோட் என்ற இடத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்ற கெஜ்ரிவால் ராகுல் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

