ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு
ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு
UPDATED : மே 30, 2024 03:40 PM
ADDED : மே 30, 2024 12:52 PM

புதுடில்லி: பண மோசடி வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதனிடையே, உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமினை 7 ம் தேதி வரை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி, டில்லி ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனுவை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 1க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.