ADDED : ஜன 07, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி அரசின் 2024- - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மூன்று நாள் குஜராத் சுற்றுப் பயணம், இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூன்று நாள் சுற்றுப் பயணமாக, குஜராத் மாநிலத்துக்கு நேற்று புறப்பட திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து, குஜராத் பயணத்தை இரண்டு நாட்களாக குறைத்துக் கொண்ட அவர், இன்று புறப்படுகிறார்.
குஜராத் பயணத்தின்போது அங்கு நடக்கும் பொதுக்கூட்டங்களில், கெஜ்ரிவால் பேசுகிறார்.