UPDATED : செப் 18, 2024 07:09 PM
ADDED : செப் 18, 2024 06:18 PM

புதுடில்லி: முதல்வர் பதவியில் இருந்து விலகிய கெஜ்ரிவால், இன்னும் சில நாட்களில் அரசு வீட்டை காலி செய்து வெளியேறுவார் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அதிஷி, புதிய முதல்வராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: முதல்வராக இருந்த போது அளிக்கப்பட்ட வீடு மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கெஜ்ரிவால் துறக்க உள்ளார். இனி அவர் சாமானிய மக்கள் போல் வசிப்பார். கெஜ்ரிவாலின் பாதுகாப்பில் கவலை உள்ளது. கடந்த காலங்களில் பல முறை தாக்கப்பட்டார். அவருக்கு வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

