UPDATED : மே 11, 2024 11:38 AM
ADDED : மே 11, 2024 12:43 AM

புதுடில்லி: திகார் சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி கொடுக்கிறார்
மதுபான கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை 'இண்டியா' கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். இதையடுத்து கட்சி தொண்டர்கள் முன் பேசிய கெஜ்ரிவால், இன்று மதியம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சியினர் செய்துள்ளனர்.
இன்று மதியம் 1 மணியளவில் பரபரப்பான பேட்டி கொடுக்க உள்ளதால், இண்டியா கூட்டணிக்கு நம்பிக்கை பிறந்துவிட்டதாக கருதுகின்றனர். இனி டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ., கருத்து
முன்னதாக கெஜ்ரிவால் விடுதலை குறித்து பா.ஜ., கூறியது, ஜாமின் கிடைத்து விட்டதால் கெஜ்ரிவால் நிரபராதி ஆகிவிடவில்லை. இடைக்கால ஜாமின் தான் பெற்றுள்ளார். மீண்டும் ஜூன் 01-ம் தேதி அவர் சிறை செல்வது உறுதி. இவ்வாறு பா.ஜ. கூறியுள்ளது.
தாய், தந்தையரிடம் ஆசி
நேற்று இரவு திகார் சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டில்லியில் தனது இல்லத்திற்கு சென்றார். அப்போது கெஜ்ரிவால் மனைவி சுனிதா , மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்ட வரவேற்றார். பின்னர் தனது தாய், தந்தையர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.