கெஜ்ரிவால் இன்று ‛‛ஜனதாகி அதலாத்'' கூட்டத்தில் உரை
கெஜ்ரிவால் இன்று ‛‛ஜனதாகி அதலாத்'' கூட்டத்தில் உரை
ADDED : அக் 06, 2024 02:40 AM

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வடக்கு டில்லியில் ஜனதாகி அதாலத் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமின் பெற்ற கெஜ்ரிவால், செப். 15-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆதிஷி என்பவர் செப்.21-ல் முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் இன்று வடக்கு டில்லி சாத்ரசால் மைதானத்தில் இரண்டாவது ‛‛ஜனதாகி அதாலத்'' என்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இது குறித்து ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய்சிங் கூறியது, வரப்போகும் டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் நியாயமான தீர்ப்பு வழங்குவர். அது கெஜ்ரிவாலின் நேர்மைக்கான சான்றிதழாகும். தவறான பிசாரத்தின் மூலம் ஆம் ஆத்மி கட்சியையும், கெஜ்ரிவாலையும் ஒழித்து கட்ட நினைப்பதே பா.ஜ.,வின் நோக்கமாக உள்ளது. அதனை கெஜ்ரிவால் முறியடிப்பார் என்றார்.