கேரளாவில் வரும் 10ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை; இன்று 11 மாவட்டங்களுக்கு அலர்ட்
கேரளாவில் வரும் 10ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை; இன்று 11 மாவட்டங்களுக்கு அலர்ட்
ADDED : செப் 05, 2025 08:33 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 10ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது , அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய பிரதேசம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வரும் செப்., 10 வரை கேரளா முழுதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்த நிலையில், தற்போது மேலும் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.