'கேரளா' பெயரை 'கேரளம்' என மாற்றக்கோரி தீர்மானம்: 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றம்
'கேரளா' பெயரை 'கேரளம்' என மாற்றக்கோரி தீர்மானம்: 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 24, 2024 04:46 PM

திருவனந்தபுரம்: 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் கொண்டுவந்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 24) கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கும்பட்சத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாறும்.