முதல் மாநிலமாக தீவிர வறுமையை ஒழித்த கேரளா: முதல்வர் பெருமிதம்
முதல் மாநிலமாக தீவிர வறுமையை ஒழித்த கேரளா: முதல்வர் பெருமிதம்
ADDED : நவ 02, 2025 12:24 AM

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் மாநிலமாக, தீவிர வறுமையை ஒழித்து கேரளா சாதனை படைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் நிறுவன தினத்தையொட்டி, சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
கேரளா உருவான தினமான இந்த நாள், வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளாவை மாற்றி நாம் சாதனை படைத்துள்ளோம். இந்த சட்டசபை பல வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளை கண்டுள்ளது.
வளர்ச்சியடைந்த கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளோம். 2021ல், புதிய அமைச்சரவை பதவியேற்ற பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று, தீவிர வறுமை ஒழிப்பு. தற்போது அந்த இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

