sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாபலி தான் தீர்வு தரணும்; நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லும் கேரளா; அபாய மணி அடிக்கும் வல்லுநர்கள்!

/

மஹாபலி தான் தீர்வு தரணும்; நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லும் கேரளா; அபாய மணி அடிக்கும் வல்லுநர்கள்!

மஹாபலி தான் தீர்வு தரணும்; நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லும் கேரளா; அபாய மணி அடிக்கும் வல்லுநர்கள்!

மஹாபலி தான் தீர்வு தரணும்; நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லும் கேரளா; அபாய மணி அடிக்கும் வல்லுநர்கள்!

11


UPDATED : செப் 07, 2024 09:36 AM

ADDED : செப் 07, 2024 09:19 AM

Google News

UPDATED : செப் 07, 2024 09:36 AM ADDED : செப் 07, 2024 09:19 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகைக்காக கேரளா அரசு ரூ.4,800 கோடி கடன் பெற்றுள்ளது. மாநில அரசின் இத்தகைய நிலை, வரும் காலத்தில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வரம்பு


கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் கேரளா அரசு, இந்த நிதியாண்டில் ரூ.37,512 கோடி மட்டுமே கடன் பெற முடியும் என்று மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதில், டிசம்பர் மாதம் வரை தேவைப்படும் செலவுகளுக்காக ரூ.21,253 கோடி மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் இப்போது ரூ.700 கோடி மட்டுமே பயன்படுத்தப்படாமல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் ஓணம் பண்டிகை வந்திருக்கிறது.

ரூ.4,800கோடி


இந்நிலையில் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) மேற்கொள்ள வேண்டிய முக்கிய செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.16,257 கோடியில் இருந்து ரூ.4,800 கோடியை அரசு நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. ஓணம் செலவினங்களுக்காக இந்த தொகை பெறப்பட்டுள்ளது. இது போதாது என்று கூட்டுறவு வங்கிகளிடம் இருந்தும் ரூ1,000 கோடி கடன் பெற்று இருக்கிறது. இதற்கு 9 சதவீதம் வட்டியும் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

பொருளாதாரம்

தொடரும் மாநில அரசின் இதுபோன்ற கடன் நடவடிக்கைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறி உள்ளதாவது; நிதி நெருக்கடி உச்சக்கட்டமாக இருக்கும் தருணத்தில் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் போனசாக 2 மாதம் ஓய்வூதியத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தலா ஒருவருக்கு ரூ.3,200 வழங்கப்படும். இந்த தொகை தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு மாத ஓய்வூதியத்தை விட கூடுதலாகும்.

பண்டிகை முன்பணம்


மேலும், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஓணம் போனஸ் ரூ.4000 வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1000 வழங்கப்படும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை முன் பணம் ரூ.20,000 அளிக்கப்படும். இதுபோல, பகுதிநேர ஊழியர்களும் ரூ.6,000 பெற தகுதியானவர்களாக உள்ளனர்.

நிதி நிலைமை



இப்படி ஓணம் போனஸ் தொகைக்கே கடன் பெற்றுள்ள மாநில அரசு, வரும் நாட்களில் நிதி நிலைமையை எவ்வாறு கையாளப் போகிறது என்பது சவாலான விஷயம் தான் என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.






      Dinamalar
      Follow us