ADDED : நவ 27, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள பிராமண சபை, உலகளாவிய சங்கமத்தின் ஆண்டு மலர், 2ம் பதிப்பினை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
திருவனந்தபுரம், மாநில செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், முதல்வர் பினராயி விஜயன், ஆண்டு மலர் புத்தகத்தின் முதல் பிரதியை, கேரள பிராமண சபையின் மாநில முன்னாள் தலைவரும், உலகளாவிய பிராமண கூட்டமைப்பு மற்றும் சங்கத்தின் தலைவருமான கரிம்புழை ராமனுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள பிராமண சபையின் மாநிலத்தலைவர் கணேஷ் மற்றும் கேரள பிராமண சபையின் திருவனந்தபுரம் மாவட்டத்தலைவர் மணி ஆகியோருக்கும், முதல்வர் பதிப்பின் பிரதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, கொரோனா காலத்தில் சமூக நல அக்கறை கொண்ட செயல்களை செய்த கேரள பிராமண சபையை முதல்வர் பாராட்டினர்.