ADDED : பிப் 15, 2025 01:49 AM
திருவனந்தபுரம்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த தாய், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் மாவட்டம், பாலராமபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு தாயான பெண் ஒருவர், திருவனந்தபுரம் சிறையில் இருந்த தன் சகோதரரை பார்க்க சென்றபோது, அதே சிறையில் இருந்த ரான்னியைச் சேர்ந்த ஜெயமோகன், 37, பழக்கமானார். சிறையில் இருந்து வெளிவந்த ஜெயமோகன், சிறுமியின் தாயிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி, தாயை பத்தனம்திட்டாவுக்கு அழைத்துள்ளார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து மூன்று பேரும் தங்கி இருந்த போது, தாய் கண் முன் வைத்தே சிறுமியை ஜெயமோகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை எவரிடமும் கூறக்கூடாது என, மிரட்டி உள்ளனர்.
சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியையிடம், தெரிவித்தார். இது குறித்து, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, சிறுமியின் தாய், ஜெயமோகன் தலைமறைவாகினர்.
மங்களூருவில் பதுங்கிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, பத்தனந்திட்டா அழைத்து வந்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.