மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்
ADDED : டிச 08, 2024 07:54 PM

புதுடில்லி: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பயன்படுத்த கேரள அரசு தவறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே ரூ.700 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.
முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் வழங்கிய நிதியை உபயோகப்படுத்தவில்லை. இது கேரளாவை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போலி பிரசாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே கண்டனத்தை தெரிவித்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், 'மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருக்கும் தொகையை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள, இந்த நிதி போதுமானதல்ல,' எனக் கூறினார்.