கேரளா:விஷமானது மயோனைஸ் 70 பேர் மருத்துவமனையில்அனுமதி
கேரளா:விஷமானது மயோனைஸ் 70 பேர் மருத்துவமனையில்அனுமதி
UPDATED : மே 26, 2024 08:57 PM
ADDED : மே 26, 2024 08:52 PM

திருச்சூர்: உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் 70பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரள மாநிலத்தின் மூணுபீடிகை என்னும் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் 70பேர் வரையில் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டு உள்ளனர். அந்த உணவிற்கு சைட் டிஷ் ஆக மயோனைஸ் தரப்பட்டு உள்ளது.இதனை சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் மயோனைஸ் உட்கொண்டதே உணவு நச்சுத்தன்மைக்கு காரணம். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என கூறினர்.
சம்பவம் நடந்த கைபமங்கலம் காவல் நிலைய அதிகாரி கூறுகையில் சம்பவம் நடைபெற்ற உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.