ADDED : மார் 05, 2026 02:20 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்கள் திருவனந்தபுரத்தில் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய நர்ஸ்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப் பட்ட இந்த போராட்டத்தில் நர்சுகளுக்கு குறைந்த பட்சம் 40,000 ரூபாயை சம்பளமாக நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை வலியுறுத்தி, நர்ஸ் கள் தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்றனர். வேலை நிறுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்ஸ்கள் கூறியதாவது:
நர்சுகள் சம்பளத்தில் 2018ல் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது.
எனினும் இதுவரை சம்பள உயர்வு அமல்படுத்தப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்சு களுக்கு நர்சிங் கவுன்சில் விதிமுறைப்படி சம்பள கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் நிர்ணயிக்கும் சம்பளமே வழங்கப்படுவதால், சம் பள வேறுபாடு நிலவுகிறது.
எனவே பணி அனுபவம் உள்ள நர்ஸ்கள் நல்ல சம்பளம் மற்றும் சொகுசு வாழ்வு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். எனவே நர்ஸ்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 40,000 ரூபாயை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
