sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூணாறில் 17,066 ஏக்கர் வனமாக மாற்றம் இறுதி நடவடிக்கையில் இறங்கிய கேரளா

/

மூணாறில் 17,066 ஏக்கர் வனமாக மாற்றம் இறுதி நடவடிக்கையில் இறங்கிய கேரளா

மூணாறில் 17,066 ஏக்கர் வனமாக மாற்றம் இறுதி நடவடிக்கையில் இறங்கிய கேரளா

மூணாறில் 17,066 ஏக்கர் வனமாக மாற்றம் இறுதி நடவடிக்கையில் இறங்கிய கேரளா


ADDED : ஜன 24, 2025 01:53 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறில் குடியிருப்பு, தோட்ட பகுதிகள் உட்பட 17,066.49 ஏக்கர் நிலத்தை வனமாக மாற்றுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது.

மூணாறில் 'கண்ணன் தேவன் ரிசர்வ்' என்ற பெயரில் 2010 அக்.8ல் அன்றைய முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடது சாரி கூட்டணி அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் வரைவு அறிக்கை வெளியிட்டது.

தற்போதைய இந்திய கம்யூ., மாநில செயலாளர் பினோய்விஸ்வம் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்பணிகளுக்கு வனத்துறை செட்டில்மென்ட் அதிகாரியாக தேவிகுளம் சப் கலெக்டர் நியமிக்கப்பட்டார். 2021 வரை எவ்வித பணிகளும் நடக்கவில்லை.

அதன் பிறகு வரைவு அறிக்கைபடி சுற்றுச்சூழலை பாதுகாக்க சின்னக்கானல், சூரிய நல்லி, செங்குளம், ஆனயிறங்கல், குமுளி ஆகிய பகுதிகளில் 1837 ஏக்கர் நிலம் வனமாக அறிவிக்கப்பட்டு அடுத்த கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் வரைவு அறிக்கையில் உள்ள சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் நில பதிவேட்டின் நகலை பெற வனத்துறை மறு சர்வே உதவி இயக்குனர் 2021 டிச.15ல் வழங்கிய கடிதத்தின் நகல் வெளியானதையடுத்து 'கண்ணன் தேவன் ரிசர்வ்' வின் வரைவு அறிக்கை தொடர்பான நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியது தெரியவந்தது.

அதன்படி மூணாறில் குடியிருப்பு, தோட்ட பகுதிகள் உட்பட 17,066.49 ஏக்கர் நிலம் வனமாக மாற்றுவதற்கு அரசு இறுதி கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வன நிலம் எல்லைக்கு உட்பட்டு வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாறும்பட்சத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

அதேபோல் தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மூணாறு நகர், சுற்றுப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us