ADDED : ஜன 16, 2025 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவாரகா: கலா ஜாதேடி கும்பலைச் சேர்ந்த துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
டில்லியின் துவாரகா பகுதி அருகே கக்ரவுலா கிராமத்தில் கலா ஜாதேடி கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர்.
சந்திரசேகர் ஆசாத் பூங்கா அருகே மோஹித், 23, என்ற தலைமறைவு குற்றவாளியை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். கலா ஜாதேடி கும்பலுக்கு விசுவாசமாக இருந்த மோஹித், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.
விசாரணையில், உள்ளூர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்க மோஹித்துடன் மற்றொரு கும்பலை சேர்ந்த ஓம் பிரகாஷ் ஜரோடியா திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
மோஹித்திடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.