ADDED : பிப் 03, 2025 04:53 AM

மைசூரில் இருந்து ஊட்டி, சுல்தான்பத்தேரி, வயநாடு, கண்ணுார் செல்லும் பிரதான சாலையாக சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் பண்டிப்பூர் வனப்பகுதி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகம், கேரளாவுக்கு சென்று வருகின்றன.
தினமும் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வனப்பகுதி சாலையில் செல்ல, வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு முன்பு வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், வனப்பகுதி சாலையில் ஒரு இடத்தில் கூர்மையான தந்தம் கொண்ட ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக இரவு, பகல் பாராமல் சுற்றி திரிகிறது. காய்கறி, நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளை மறித்து உணவு பொருட்களை சாப்பிடுகிறது.
திடீரென ஆக்ரோஷமாக மாறி வாகனங்களை துரத்துகிறது. கூர்மையான தந்தம் இருப்பதால் யானையை பார்த்து வாகன ஓட்டிகள் பயப்படுகின்றனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வனத்துறையினர் முயற்சித்தும் முடியவில்லை.

