பஞ்சாப் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி
பஞ்சாப் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி
ADDED : ஜன 16, 2024 05:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் அம்மாநில டிஜிபிக்கு கொலை மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்றவரும், அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். இவரை கொலை செய்ய சதி நடந்ததாக அமெரிக்கா கூறியது. இது தொடர்பாக விசாரணை நடப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் டிஜிபி கவுரா யாதவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை குர்பத்வந்த் சிங் பன்னூன் வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் ஒன்று கூடி தாக்குதல் நடத்தும்படி அந்த வீடியோவில் பயங்கரவாதி தெரிவித்துள்ளார்.