தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ கார்கேவால் உணர முடியவில்லை!

கார்கேவால் உணர முடியவில்லை!

கார்கேவால் உணர முடியவில்லை!

1


ADDED : ஏப் 23, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 03:41 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் சிறந்த நண்பர். ஆனால் ஒரு விவகாரத்தில் மட்டும் எனக்கு கருத்து முரண் உள்ளது. பயங்கரவாதிக்கும், பயங்கரவாதிக்கு பயத்தை அளிப்பவருக்கும் இடையிலான வித்தியாசத்தை கார்கேவால் உணர முடியவில்லை.

- சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி

நடவடிக்கை தொடரும்!


பஹல்காம் தாக்குதலில், நம் மக்களை இழந்த துயரமும், வலியும் இன்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் நீடிக்கிறது. பயங்கரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி. அதை எதிர்த்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். பயங்கரவாதம், அதற்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.

- அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,

தலைவணங்காது!


பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நாடு எப்போதும் மறக்காது. பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக தேசம் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்கும். வெறுப்பையும், அச்சத்தையும் பரப்ப முயலும் சக்திகளுக்கு முன், நம் நாடு ஒருபோதும் தலைவணங்காது.

- ராகுல் , லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us