ADDED : ஏப் 03, 2025 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திலக் நகர்: மேற்கு டில்லியின் திலக் நகரில் இருந்து கடத்தப்பட்ட தொழிலதிபர், உ.பி.,யில் சடலமாக மீட்கப்பட்டார்.
திலக் நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் சாகர், 35. கடந்த மாதம் 26ம் தேதி மர்ம நபர்களால் அவர் கடத்திச் செல்லப்பட்டார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், சாகர் என்பது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினர் உடலை அடையாளம் காட்டினர்.
அவரை கடத்திக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இதற்கிடையில் சுபாஷ்நகர் சவுக்கில் இருந்து திலக் நகர் காவல் நிலையம் வரை மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்போவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

