கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை
கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை
ADDED : ஜன 30, 2024 12:53 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் என்பவர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் ஓபிசி மோர்சா பிரிவின் கேரள மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன். இவர், கடந்த 2021ம் ஆண்டு டிச.,19ல் வீட்டில் இருந்த போது மனைவி, குழந்தைகள் முன்பு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு, ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேருக்கு நேரடியாக தொடர்பு இருந்ததும், 3 பேர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்த நைசாம், அஹ்மல், அனுப், முகமது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாகீர் உசைன், ஷாஜி , சம்னாஸ் அஸ்ரப் ஆகிய 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.