தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அம்மிக்கல்லை போட்டு உ.பி., வாலிபர் படுகொலை

அம்மிக்கல்லை போட்டு உ.பி., வாலிபர் படுகொலை

அம்மிக்கல்லை போட்டு உ.பி., வாலிபர் படுகொலை


ADDED : பிப் 27, 2024 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சஹாரி, 40, மற்றும் சோட்டு, 35. கூலித் தொழிலாளர்களான இருவரும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளக்கடி கோவில் தோப்புத் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கிஇருந்தனர்.

காஞ்சிபுரத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.

கடந்த, 24ம் தேதி இரவு, இருவரும் வீட்டில் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த சஹாரி, சோட்டு தலை மீது அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்தார். சற்று நேரத்தில் நிதானத்துக்கு வந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

வடமாநில தொழிலாளர்கள் இரு நாட்களாக வெளியிலேயே வராததால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விஷ்ணு காஞ்சி போலீசார் நேற்று முன்தினம் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். ரத்தம் உறைந்து சோட்டு இறந்து கிடந்தார்.

உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சஹாரியை தேடினர். இந்நிலையில், காஞ்சிபுரம் தேரடியில் திரிந்த சஹாரியை, அன்று இரவே கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us