முடிவுக்கு வரும் கோல்கட்டா டாக்டர்கள் ஸ்டிரைக்: 21-ம் தேதி பணிக்கு திரும்ப முடிவு
முடிவுக்கு வரும் கோல்கட்டா டாக்டர்கள் ஸ்டிரைக்: 21-ம் தேதி பணிக்கு திரும்ப முடிவு
ADDED : செப் 19, 2024 10:41 PM

கோல்கட்டா : போராட்டம் நடத்தி வரும் கோல்கட்டா அரசு மருத்துவமனை இளம் டாக்டர்கள் செப்.21 முதல் பணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஆக., 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.பணி இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் மம்தா பானர்ஜியுடன், பயிற்சி டாக்டர்கள் கடந்த 16ம் தேதி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட பேச்சு தலைமைச் செயலர் மனோஜ் பண்ட் தலைமையிலான அதிகாரிகளுடன் நடந்த பேச்சில் முன்னேற்றமில்லை டாக்டர்கள் போராட்டத்தை தொடர முடிவு செய்த நிலையில் ஸ்டிரைக்கை வாபஸ்பெறுவதாக இன்று ( செப்.,19) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப். 21-ம் தேதி முதல் பணிக்கு திரும்புகி்ன்றனர். இதன் மூலம் 41 நாட்கள் நடந்த டாக்டர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது.

