தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அசாமில் கோல்கத்தா - சைராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

அசாமில் கோல்கத்தா - சைராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

அசாமில் கோல்கத்தா - சைராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து


ADDED : நவ 11, 2026 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 09:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவுகாத்தி: மிசோரமில் இருந்து கோல்கத்தா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அசாமின் கவுகாத்தி புறநகர் பகுதியில் உள்ள திகாரு ரயில்நிலையம் அருகே இன்று அதிகாலை இன்ஜின் உள்பட 7 பெட்டிகள் தடம்புரண்டன.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்குமா? என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ரயில் தடம்புரண்ட விபத்தினால் அந்த வழியான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us