sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ஒரே ஆண்டில் ரூ.72 கோடி வசூல்

/

கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ஒரே ஆண்டில் ரூ.72 கோடி வசூல்

கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ஒரே ஆண்டில் ரூ.72 கோடி வசூல்

கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ஒரே ஆண்டில் ரூ.72 கோடி வசூல்


ADDED : ஏப் 11, 2025 11:04 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி: பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றான கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ஒரே ஆண்டில் 71.93 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவின், கொல்லுாரில் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இது நாட்டின் பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்று. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலின் வருவாய் ஆண்டுக்கு, ஆண்டு ஏறுமுகமாக உள்ளது.

பக்தர்களின் காணிக்கை, வெவ்வேறு சேவைகள் மூலம், கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. 2023 - 24ம் ஆண்டு 71.93 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட, 3.9 கோடி ரூபாய் அதிகம்.

கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

கொல்லுார் மூகாம்பிகை கோவிலில், தினமும் 12 சண்டிகா ஹோமங்கள் நடக்கின்றன. சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். சண்டிகா ஹோமம் மூலமாக, ஆண்டுதோறும் கோவிலுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

சண்டிகா ஹோமம் செய்ய, நான்கைந்து மாதங்களுக்கு முன்னதாக, பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த சேவைக்கு 10,000 ரூபாய் கட்டணம் உள்ளது. இதை தவிர நவசண்டி, ஷதசண்டி, சஹஸ்ர சண்டி யாகங்களும் நடக்கின்றன.

அம்பாளுக்கு பக்தர்கள் காணிக்கையாக அர்ப்பணிக்கும் சேலைகள், மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு பக்தர்களுக்கு விற்கப்படுகின்றன. இதில் இருந்தும் வருவாய் கிடைக்கிறது. தங்கும் விடுதி, பார்க்கிங், பிரசாத வினியோகம் மூலமாகவும், வருவாய் வருகிறது.

கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லுாரிகளில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கல்வி பயில்கின்றனர். கோவிலில் பக்தர்களுக்கு மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. கொல்லுாரில் நடக்கும் வளர்ச்சி பணிகளிலும், கோவில் நிர்வாகம் கைகோர்க்கிறது.

உடுப்பி மாவட்டம் முழுதும் நடக்கும் திட்டப் பணிகளுக்கும், கோவில் ஒத்துழைப்பு அளிக்கிறது. கோவிலின் வருவாய் நற்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், பக்தர்கள் மூகாம்பிகையை தரிசிக்க கொல்லுாருக்கு வருகின்றனர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள் என, முக்கியஸ்தர்கள் வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள், பிரபல பாடகர் ஜேசுதாஸ், இசை அமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரிஷப் ஷெட்டி, மலையாள நடிகர் ஜெயராம், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காங்., மூத்த தலைவர் வேணுகோபால், துணை முதல்வர் சிவகுமார், பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, பலர் கொல்லுார் மூகாம்பிகையை தரிசிக்க அவ்வப்போது வரும் பக்தர்களாவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us