sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!

/

நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!

நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!

நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!

4


ADDED : ஜூலை 12, 2025 01:27 PM

Google News

4

ADDED : ஜூலை 12, 2025 01:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரின் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர் டெலிவரி செய்து வருகிறது. இந்த புது முயற்சி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது ஆன்லைன் விற்பனை நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த காலத்தில் பைகளை தூக்கி கொண்டு கடைக்கு சென்று வாங்கி வரும் முறை, தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மலையேறி போய்விட்டது. வீட்டில் இருந்தே மொபைல் போனில் ஆர்டர் செய்து காய்கறிகள், மளிகை சாமான்களை மக்கள் வாங்கி வருகின்றனர்.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒரு படி மேலே சென்று யோசித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரின் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர்டெலிவரி செய்து வருகிறது. இந்த ''கேஸ் டாக் புட்'' ஸ்டார்ட் அப் நிறுவனம் நண்பர்கள் சாரங் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு நாயின் ஊட்டச்சத்து தேவைகளுக்கும் ஏற்ப வீட்டில் சமைத்த உணவுகளை வழங்குகிறது. இருவரும் தங்கள் சொந்த செல்லப்பிராணிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் கவனித்தபோது, இந்த யோசனை வந்துள்ளது. இது குறித்து ஸ்டார்ட் அப் நிறுவனம் உரிமையாளர் கோவிந்த் கூறியதாவது: நாங்கள் கால்நடை மருத்துவமனைகளுக்கு அடிக்கடி வருபவர்களாக இருந்தோம்.

நாய்களுக்கு ஏன் புதிய, சமச்சீரான உணவு கொடுக்கக்கூடாது? என்று நாங்கள் யோசித்தோம். கால்நடை மூத்த டாக்டர்கள் உதவியுடன், 30 வெவ்வேறு இனங்களில் தங்கள் சமையல் குறிப்புகளை சோதனை செய்தோம்.

இயற்கை மருத்துவ டாக்டர் அபிஜித் கர்மாவின் ஆதரவுடன், இப்போது தினமும் 25-30 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம். நாங்கள் நாய்களை மூன்று அளவுகளாக வகைப்படுத்துகிறோம். சிறியது, நடுத்தரமானது மற்றும் பெரியது. காலையில் சமையல் தொடங்கி, பிற்பகல் 3 மணிக்குள் 15 கி.மீ சுற்றளவில் டெலிவரி செய்து வருகிறோம்.

உணவு 100 சதவீதம் இயற்கையானது, சுகாதாரமானது. இந்த வகையான உணவுமுறை ஒரு நாயின் ஆயுட்காலத்தை மேம்படுத்த உதவுகிறது. நம்மைச் சுற்றி நிறைய வாய்ப்புகள் உள்ளன.கோட்டயம் போன்ற ஒரு சிறிய நகரத்தில் இதுபோன்ற ஒரு முயற்சியை நடத்துவதில் சவால்கள் இருந்தபோதிலும், சமூக ஆதரவு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, ஆர்டர்கள் வாட்ஸ்அப் வழியாக பெறப்பட்டு டோர்டெலிவரி செய்யப்படுகிறது. அடுத்த கட்டமாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி கொச்சி மற்றும் பெங்களூருக்கு சேவையை ஸ்டார்வ் அப் நிறுவனம் விரிவுப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us