ADDED : ஆக 22, 2011 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரா : உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளதால், கோவிலின் அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை துவங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா, நள்ளிரவு வரை நடைபெறும்.